ரூ.5,000 கோடி மோசடி தொழில் அதிபர் கைது

சென்னை: தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரியில், நிறுவனம் நடத்தி, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, தொழில் அதிபர் பிரேம்குமார், 55, கேரளா மாநில போலீசாரால், சென்னையில் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்; தொழில் அதிபர். கேரளாவில் தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகிறார்.

இவரது தந்தை சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனால், பிரேம் குமாருக்கு சென்னையிலும் வீடு உள்ளது.

இவர், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ‘பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம்’ என்ற நிதி நிறுவனத்தை நடத்தி, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை, ேஹாட்டல், ரிசார்ட், தியேட்டர் கட்ட பயன்படுத்தியதாக கூறப் படுகிறது.

இம்மோசடி குறித்த புகார் குறித்து, கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள், சென்னையில் நேற்று பிரேம்குமாரை கைது செய்தனர்.

Source link