அரியலுார்: நானாங்கூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மனைவி ராஜேஸ்வரி, 35, அக்., 26ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான, அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது கள்ளக்காதலன் பாலமுருகன், 26, என்பவரை, கீழப்பழுவூர் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு: பூலாவலசையைச் சேர்ந்த சிவசிரஞ்சீவி, 28, என்பவரது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய, கள ஆய்வு செய்து, 37 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கொடுமுடி தாசில்தார் பரிமளா தேவி, 54, என்பவர் மீது, ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவண்ணாமலை: இருமந்தாங்கல் கார்த்திகேயன், 53, மகள் யுவராணி, 20, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் செய்யாறுக்கு பைக்கில் சென்றுவிட்டு, பல்லிமேட்டு நகர் அருகே வந்தபோது, கோகுல், 19, என்பவர் ஓட்டி வந்த பைக், நேருக்கு நேர் மோதியது. இதில், கார்த்திகேயன், யுவராணி பலியாகினர்.
தஞ்சாவூர்: மடிகையை சேர்ந்த கூலி தொழிலாளி இளவரசன், 30, என்பவர், 17 வயது இளம்பெண்ணுக்கு அக்., 27ம் தேதி பாலியல் தொல்லை அளித்தார். இளம்பெண் பெற்றோர் புகாரில், வல்லம் மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில், இளவசரனை நேற்று கைது செய்தனர்.
