குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது தானே, அதிக சாமர்த்தியம்… அதை சேகர்பாபு மறந்து விட்டாரே!
தங்கள் கட்சிக்கு இந்திய அளவில் மவுசே இல்லை என்பது, கார்கேவுக்கும், ராகுலுக்கும் இப்போது புரிந்திருக்கும். நான்கு மாநில சட்ட மேல்சபைத் தேர்தலுக்கும் ஓட்டுச் சீட்டு முறை தான் பின்பற்றப்பட்டது. நான்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் மண்ணைக் கவ்வி, ‘செம உதை’ வாங்கி விட்டதே!
உயரிய நோக்கத்துடன் எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி, ஜெயலலிதாவின் காலத்தில் மிக கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட கட்சியின் இன்றைய நிலையை பாருங்கள் ரேவதி!
காங்கிரஸ் ஆட்சி என்பதே இனி கனவு தான். இதில் எங்கிருந்து காமராஜர் ஆட்சி கொடுக்கப் போகின்றனர்!
கடவுளுக்கு பயந்த கொள்ளையன் என்று தெரிகிறது. அவனது சிறுவயதில் அவனது அம்மா, ‘தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும்’ என்று கூறியிருப்பார் போலும்!
பா.ம.க., ராமதாஸ் பாணியில், ‘போக போக தெரியும்…’ என்று பாட தோன்றுகிறது நடராஜன்.
இதில் எத்தனை பெருச்சாளிகளும், முதலைகளும் மாட்டப் போகின்றனரோ!
