சென்னையில் இன்று (அக். 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை: உங்க ஏரியா இதுல இருக்கா?

சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் கொடுக்கப்படும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (30.10.2026) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த இடைவெளியில் அவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனகாபுத்தூர் பகுதி மின்தடை விவரங்கள்

அனகாபுத்தூர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:

  • காமராஜபுரம்
  • திருநீர்மலை மெயின் ரோடு
  • எல்ஐசி காலனி
  • ராஜீவ் காந்தி நகர்
  • விக்டோரியா தெரு
  • பெரியார் தெரு
  • நேசமணி தெரு
  • மரியன்னை தெரு
  • அன்னை மேரி தெரு
  • வினயா நகர்
  • இபி காலனி
  • அமர்சன் நகர்
  • த்ரீ ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு
  • திருவள்ளுவர் மெயின் ரோடு
  • பக்தவச்சலம் 1வது முதல் 3வது தெருக்கள்

பல்லாவரம் மற்றும் பம்மல் பகுதி மின்தடை விவரங்கள்

  • பம்மல்
  • அனந்தராமன் கிருஷ்ணன் தெரு
  • வெள்ளியங்கிரி தெரு
  • விஓசி நகர்
  • ராதாகிருஷ்ணன் தெரு
  • பாரதியார் தெரு
  • பாலாஜி நகர்
  • சிவாஜி தெரு
  • சங்கர நாராயணன் தெரு
  • கரிகாலன் தெரு
  • கம்பர் தெரு
  • சேரன் தெரு
  • கட்டபொம்மன் தெரு
  • விவேகானந்தர் தெரு
  • பாஸ்கரன் தெரு
  • ராஜாஜி தெரு
  • சத்தியமூர்த்தி தெரு
  • ஜார்ஜ் – 7வது தெரு
  • எம்ஜிஆர் நகர் 1
  • பராசக்தி தெரு
  • இப்ராகிம் தெரு

பராமரிப்புப் பணிகள் நேரத்திற்கு முன்னதாகவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டால், மதியத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படலாம் என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மின் சார்ந்த அவசர தேவைகளை முன்னதாகவே கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Source link