தேர்தல் பிரசார கூட்டம் ரத்து குறித்து கேள்வி; பத்திரிகையாளரை அதிபர் டிரம்ப் உருவகேலி செய்ததால் சர்ச்சை

நமது நிருபர்

வரும் நவம்பர் 3ல் நடக்க உள்ள இடைத்தேர்தலையொட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் கன்சாஸ், அயோவா ஆகிய மாகாணத்தில் திட்டமிட்டு இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை திடீரென ரத்து செய்தார்.

இது குறித்து, வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் டிரம்பிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

டிரம்பின் உடல்நலம் குறித்தும், தொடர் பயணங்கள் காரணமாக அவர் சோர்வடைந்து கூட்டங்களை ரத்து செய்தாரா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு அதிபர் டிரம்ப் கோபம் அடைந்தார். நிருபரின் உடல் அமைப்பைக் கேலி செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அதிபர் டிரம்ப் கூறியதாவது: தனது உடல்நிலை மிக ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த ஆளைப் பாருங்கள், இவர் சற்றும் உடல் தகுதி இல்லாமல் இருக்கிறார். நீங்கள் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறீர்கள்.

முதலில் உங்கள் உடலைத் தகுதியாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் மிக மோசமாக இருக்கிறீர்கள்; பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறீர்கள். இவ்வாறு டிரமப் உருவகேலி செய்துள்ளார்.

Source link