கன்னியாகுமரி: ‘தவெக ஆட்சியில் நாட்டின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் ஏஐ நகரம் உருவாக்கப்படும். தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்’ என தவெக தலைவர் விஜய் கூறினார்.
கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி, காரைக்குடி மக்களுக்கு வணக்கம். அன்று காரைக்குடியில் என்னால் பேச முடியாமல் போனது. இப்போது தவெக ஆட்சியின் சில திட்டங்களை அறிவிக்கிறேன். தவெக அரசு அமைந்தால், நம் ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலத்திட்டம் போய் சேரும். அதற்காக ஆதார் அட்டை போல தமிழகத்தில் ஒரு அடையாள அட்டை உருவாக்கப்படும். ஏஐ தரவுடன், லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள் இந்த அட்டை மூலம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
