“காலத்தால் அழியாத பிரகாசம் கொண்டது ஆஷா போஸ்லேவின் குரல்”

ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பன்முகக் குரல் வளமை கொண்ட ஆஷா போஸ்லேவின் மறைவால் நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பல தசாப்தங்களாக நீடித்த அவரது தனித்துவமான இசைப் பயணம் நமது கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்டது. மனதை வருடும் மெல்லிசைகள் முதல் எழுச்சியூட்டும் பாடல்கள் வரை, அவரது குரல் காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண்டிருந்தது.

ஆஷா போஸ்லேவுடனான எனது உரையாடல்களின் நினைவுகளை நான் என்றென்றும் போற்றுவேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும்” என்று குறிப்பிட்டார்.

Source link