நீங்க எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டரா?போலீசாரிடம் அதிகாரத் தொனியில் பேச்சிய விவகாரம்- விசாரணைக்கு ஆஜரான சேகர்பாபு – former dmk minister sekar babu appears for questioning in a case involving an argument with the police

அன்பில் மகேஷ் கைதானபோது காவல் ஆணையர் அலுவலகத்தில் வாக்குவாதம் தொடர்பாக வழக்கில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 10 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேப்பேரி போலீசார் சம்மன் அனுப்பட்டுள்ளது.

100 கோடி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட அன்பில்மகேஷ

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அரசாங்கீகாரம் வழங்கி தருவதாக கூறி 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்ததது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மத்திய குற்ற பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .பின்னர் விசாரணைக்காக அன்பில் மகேஷை ஏற்றி வந்த போலீஸ் வாகனம் காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது . அப்போது அன்பில் மகேஷை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி கலாநிதி விரா சாமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது உள்ளே செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து உள்ளே விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த சேகர் பாபு, என்ன பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்களா.. நீ எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டரா? என காவல்துறையினரை ஒருமையில் பேசியிருந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, சட்டம்–ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்த முயன்றதாக வேப்பேரி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் அரசு ஊழியருக்குக் காயம் ஏற்படுத்துதல்உள்ளிட்ட இரண்டு கடுமையான பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மற்றும் அடையாளம் காணப்பட்ட 10 திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

விசாரணைக்கு ஆஜரான சேகர்பாபு

இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வேப்பேரி காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று திமுக முன்னாள் அமைச்சர் கேகர்பாபு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, மற்றொரு மூத்த முன்னாள் அமைச்சரான சேகர்பாபு மற்றும் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
Source link