இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா?; மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் இன்று (30-10-26) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று அங்கிருக்கும் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “நேதாஜ் சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய விடுதலை போராட்டத்திற்கு துணை நின்றவர் தான் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேய அரசினுடைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து போராடிய ஒரு போராளி தான் தேவர். சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். திமுக ஆட்சி காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 2 மண்டபங்கள் அமைக்கப்படும் எனச் சொல்லி அந்த அடிப்படையில் 2024ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரங்கத்தை நான் தான் திறந்து வைத்தேன்.

தேசத்திற்காக போராடிய பசும்பொன் ஐயாவின் பெருமையை போற்ற, திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2007ஆம் ஆண்டு தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னாள் முதல்வர் கலைஞர் தான் சிறப்பாக கொண்டாடினார். தொடர்ந்து என்னுடைய தலைமையில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சி காலத்தில், பல்வேறு பணிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். கோழையாக இருக்கக்கூடாது, போராடி வெற்றி பெற வேண்டும் என்று அவர் சொன்ன அந்த திருவாசகம் தான் என்னுடைய மனதில் என்றைக்கும் நிலைத்து இருக்கிறது. இந்த ஆட்சி வர வேண்டும் என்று விரும்பி ஓட்டு அளித்தவர்கள் எல்லாம் இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற நிலையில் போய் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” என்று கூறினார்.

இதையடுத்து அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதை பற்றி பிறகு பேசலாம்” என்று தெரிவித்தார்.