முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ படம் மூலம் இயக்குநராக சினிமாவில் நுழைந்தார். அண்மையில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே பிரபல நகைக்கட நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக அவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. பின்பு சேலத்தில் இவருக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூக வலைதளங்களில் அவரதுர் பெயரில் பல்வேறு கணக்குகள் இருக்கிறது.
இந்த நிலையில் தான் எந்த ரசிகர் மன்றமும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்குகளையும் அவர் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீழே பட்டியவிடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘Instagram: User name-jason sanjay official, Facebook: User name-Jason Sanjay, Twitter: User name-Jason Sanjay Official’. இவை தவிர, பிற டிஜிட்டல் தளங்களில் என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தைப் பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும். பக்கங்களும் முற்றிலும் போலியானவை.
எனவே, மேலே குறிப்பிடப்படாத வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள், மெசேஜ்கள் அல்லது வணிகத் தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல. அதே போல் நாங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ சங்கத்தையோ அல்லது சமூகக் குழுவையோ அங்கீகரிக்கவில்லை, தொடங்கவில்லை அல்லது அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் அல்லது ‘அங்கீகரிக்கப்பட்ட குழு என்று உரிமை கோரும் எந்தவொரு குழுக்களும் பக்கங்களும் அல்லது கணக்குகளும் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் அங்கீகரிக்கப்படாதவை ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
My only official accounts are Instagram – jason.sanjay_official , Facebook – JasonSanjay , and X – @official_jsj
— Jason Sanjay pic.twitter.com/xdGYHQJqYC
