குழந்தைகளை கவரும் புதிய கலர்ஃபுல் பட்டாசுகள்.. இந்த தீபாவளிக்கு என்னென்ன ஸ்பெஷல்? – diwali 2026 sivakasi latest firecrackers collection

2026 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே, சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அதேபோல் தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது புத்தாண்டைகளுக்கு இணையாக பட்டாசுகள் தான். அனைவருக்கும் பட்டாசுகள் பிடிக்கும் என்றாலும் காலத்திற்கு ஏற்ப பட்டாசு வகைகளும் மாறி வருவதுண்டு.தமிழகத்தில்பட்டாசு உற்பத்திக்கு பெயர் போனது சிவகாசி தான். தீபாவளி தொடங்கும் மாதத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பட்டாசு உற்பத்தி மும்முரமாக இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சிவகாசியில் விதவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன இதில் குழந்தைகளை கவரும் விதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மலர்ந்து ஜொலிக்கும் தாமரை குளத்தில் மலரும் தாமரையை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் சிவகாசியில் உருவான புதியதாமரை20 அடி உயரத்திற்கு சிவப்பு மஞ்சள் கலர்களை தீப்பொறிக்களாக ஜொலிக்க விடும்.

ஐ கோன் கோல்டன் ஸ்டார்

தனிச்சிறப்புகள்:

சுமார் 7 இன்ச் உயரமும், தடிமனான அமைப்பும் கொண்ட 2 பெரிய கோன்கள் இடம்பெற்றுள்ளன.

இதனைப் பற்றவைக்கும்போது, கண்கவர் தங்க நிறத்தில் (Golden Fountain) மிக உயரத்திற்குப் பொங்கி எழும் பிரம்மாண்டமான தீப்பொறித் தாரைகளை வெளிப்படுத்துவது இதன் முக்கியச் சிறப்பம்சமாகும்.

இரவில் கண்களைக் கவரும் தங்க நிற ஒளிரும் காட்சியைத் தரும் இந்த பட்டாசு அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் கலாயுதம்

இப்பட்டாசை கையில் பிடித்துக் கொண்டு பற்றவைத்தால், அம்மனே நேரில் வந்து தாண்டவம் ஆடுவது போல சுழன்று பிரகாசமான தீப்பொறிகளை வெளிப்படுத்தும்.

வயலட் புஸ்வாணம்

பொதுவாக புஸ்வாணங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமே தீப்பொறிகளை உமிழும். ஆனால், இந்த புதிய ரக புஸ்வாணம் கண்ணைக் கவரும் ‘வயலட்’ (ஊதா) நிறத்தில் பொறிகளை வாரி இறைத்து வர்ணஜாலம் காட்டுகிறது.

மின்னும் பர்பிள் பைரோ

வானில் சென்று வெடிக்கும் பேன்சி பட்டாசுகள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே ஒளிரும். ஆனால், இந்த ‘பர்பிள் பைரோ’ வானில் 200 அடி உயரம் வரை சென்று, அடர் ‘பர்பிள்’ நிறத்தில் பிரம்மாண்டமாக விரிந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.

கதா விடும் காப்டர்

இப்பட்டாசைப் பற்றவைத்தால், ஹெலிகாப்டர் போல சீறிப்பாய்ந்து 350 அடி உயரம் வரை மேலே சென்று, சுமார் 70 அடி சுற்றளவில் வானில் வண்ண வண்ண ஒளிகளைத் தூவி அதிசயிக்க வைக்கிறது.

தரையில் நீந்தும் ‘பங்கி பிஷ்’

மீன்கள் தண்ணீரில் நீந்துவது போல, இந்த பட்டாசைப் பற்றவைத்தால் தரையிலேயே முன்னும் பின்னுமாக துள்ளி நீந்தி வண்ணத் தீப்பொறிகளைச் சிதறடிக்கும்.

பொங்கி வரும் ஷாம்பெயின்

ஷாம்பெயின் பாட்டிலைக் குலுக்கித் திறக்கும்போது நுரை பொங்கி வழிவது போல, இந்த பட்டாசைப் பற்றவைத்தால் நுரை வடிவில் விதவிதமான தீப்பொறிகள் பொங்கி வழிந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தும்.

விசில் போடும் சுட்டி கார்

தரையில் ஓடும் பொம்மை கார் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள், பற்றவைத்தவுடன் விசில் சத்தத்துடன் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து சென்று தரையில் சுழன்று விளையாடும்.

இத்தகைய புதுமையான, கண்கவர் பட்டாசுகள் சந்தைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Source link