போராட்டத்தால் 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பறிபோகும்; சோனியாவுக்கு டில்லி வியாபாரிகள் சங்கம் கடிதம்

புதுடில்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி சார்பில், வரும் நவ.,1ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில்; இண்டி கூட்டணி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ராம் லீலா மைதானத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் 20 முக்கிய மொத்த விற்பனை சந்தைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து தினமும் கோடிக்கணக்கான பொருட்கள் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இண்டி கூட்டணி போராட்டத்தினால் அக்.,31, நவ.,1ம் தேதிகளில் வியாபாரம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது டில்லியில் உள்ள 20 லட்சம் வர்த்தகர்களிடையே பீதி நிலவுகிறது.

நகரத்தின் வர்த்தகத் துறை கடந்த 25 நாட்களில் ஏற்கனவே ரூ.3,000 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இந்தப் பேரணியால் மேலும் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்படும் என அபாயம் உருவாகியுள்ளது. வெறும் 50,000 பேர் மட்டுமே கூடும் திறன் கொண்ட ராம்லீலா மைதானத்தில், 10 லட்சம் பேர் திரள்வார்கள் என்று கூறப்படுவதால், போக்குவரத்து உட்பட பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?, இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு பிறகாவது இந்தப் பேரணியை ஒத்திவைக்குமாறு பிற வர்த்தக சங்கங்களும் இண்டி கூட்டணிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

.

Source link