IPL 2026 | குஜராத் வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 19-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 11 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்னிலும் அவுட்டாகினர். பவர்பிளே முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.

குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

Source link