பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஏப்ரல் 14 அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இக்கூட்டத்திற்குப் பிறகு நிதிஷ் குமார் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினரான பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பல முக்கிய செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தற்போதைய நிதிஷ் குமார் அமைச்சரவையின் கடைசி கூட்டமாக இருக்கக்கூடும் என்றும், இக்கூட்டத்திற்குப் பிறகு நிதிஷ் குமார் தனது ராஜினாமாவைச் சமர்ப்பிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பின்னர் ஏப்ரல் 15 அன்று புதிய முதல்வர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
