தமிமுன் அன்சாரியின் நெகிழ்ச்சி செயல்; கண் கலங்கிய மாற்றுத்திறனாளி!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

அந்த வகையில், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தமிமுன் அன்சாரி இன்று (12-04-26) காலை சிதம்பரத்தில் பரப்புரைக்கு புறப்படும் முன்பு தனது வாகனத்தில் டீசலை நிரப்ப வந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு மாற்றுத்திறனாளி, தனது அலைபேசியை தமிமுன் அன்சாரியிடம் கொடுத்து, ஒரு செஃல்பி எடுத்துக் கொள்வோம் என்று கூறியதும் அவ்வாறு செய்தார்.

அதன் பின், ‘நீங்கள் வெற்றி பெற்று வந்தவுடன் மாற்றுத்திறனாளி ஆன எனக்கு பட்டா பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என அந்த மாற்றுத் திறனாளி கோரிக்கை வைத்தார். அதனை உடனே ஏற்று அவரது செல்போன் நம்பரையும் பெற்றுக் கொண்டு தனது எண்ணையும் அவரிடம் கொடுத்தார். இதனால் நெகிழ்ந்து போன அந்த மாற்றத்திறனாளி அங்கேயே கண்கலங்கி விட்டார்.

Source link