நமது நிருபர்
பா.ஜ.,வின் ‘பி டீம்’ விஜயின் த.வெ.க., என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து துரை வைகோ கூறியதாவது: அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி அமைத்ததை, அ.தி.மு.க.,வில் உள்ள சிலருக்கே பிடிக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்க்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை, பா.ஜ.,வின் கிளை கழகமாக அ.தி.மு.க., மாறி விட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,- தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி. விஜயின் த.வெ.க., கட்சியில் வேட்பாளர் அறிவிப்பு, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றின் வாயிலாக, அக்கட்சி, பா.ஜ.,வின் ‘பி டீமாக’ செயல்படுவதை பார்க்க முடிகிறது.
மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்டம், ‘எய்ம்ஸ்’ போன்ற திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். தேர்தலின்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரிகள் மாற்றம் நடக்கவில்லை. இணையதளத்தில் ஜனநாயகன் படம் ‘லீக்’ ஆனது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழகத்தை விட வட மாநிலங்களில் தான் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. இவ்வாறு துரை வைகோ கூறினார்.
