திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு; கரூரில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனலாக மாறி வருகிறது. மே 4ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இந்த பரபரப்பான சூழலில், கரூர் திமுக வேட்பாளர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று (12-04-26) அதிரடியாக சோதனை நடத்தினர். கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக தியாகராஜன் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலை ஒட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் தியாகராஜனுக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10ஆம் தேதி திருச்சி, கரூர், ராமநாதபுரம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட 40 இடங்களில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link