நெல்லிக்குப்பம் : விசி கட்சி தலைவர் திருமாவளவன் மீது, தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி தொகுதி, விசி கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, ஏப்., 10 இரவு, நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர், கூட்டம் நடந்த இடத்துக்கு இரவு, 10:20 மணிக்கு வந்தார்.தேர்தல் ஆணையம் விதிப்படி, இரவு, 10:00 மணி வரை தான், பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், திருமாவளவன் பேசாமல் கையசைத்தபடி சென்றார். ஆனால், தொண்டர்கள் ‘பானை’ சின்னத்துக்கு ஓட்டு கேட்டு கோஷமிட்டனர். உதவி தேர்தல் அலுவலர் பலராமன் புகாரில், நெல்லிக்குப்பம் போலீசார், திருமாவளவன், வேட்பாளர் அப்துல் ரஹ்மான், தொகுதி செயலர் அருள்செல்வம் உட்பட பலர் மீது வழக்கு பதிந்தனர்.
அதேபோல, மதுரை மாவட்டம், பேரையூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விதியை மீறி, நேற்றிரவு 10:20 மணி வரை பேசினார். போலீசார் விசாரிக்கின்றனர்.
