தமிழ்நாட்டில் AI நகரம், AI அமைச்சகம், AI பல்கலைக்கழகம் – செயற்கை நுண்ணறிவில் கவனத்தை குவித்த விஜய்

கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

குறிப்பாக அவர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து வழங்கிய வாக்குறுதிகள் கவனம் பெற்று வருகின்றன.

*தமிழ்நாடு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தலைநகரமாக மாறும்.

*தமிழ்நாட்டின் முதல் செய்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

*உலகளாவிய தொழிநுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியார்களை ஈர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான உலகளாவிய மையமான ஏஐ நகரத்தை உருவாக்குவோம்.

*1000 டீப் டெக் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சியில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும்.

*இந்த பணிகளை நிர்வகிக்க இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகத்தை உருவாக்குவோம்.

என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்கள் ஒரே இடத்தில அனைத்து வசதிகளையும் பெற myvetritamilnadu.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டும்.

அதில், மக்கள், மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை முன்வைக்கலாம்.

அரசு சேவைகளை மதிப்பிடலாம், நிதிநிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Source link