ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 20-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதின. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோட சிறப்பான துவக்கம் கொடுத்தது.
சால்ட் 36 பந்துகளில் 78 ரன்கள் (6 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாச, விராட் கோலி 38 பந்துகளில் 50 ரன்கள் (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார். தொடர்ந்து ஆடிய கேப்டன் ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் 53 ரன்களும், டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ரன்களும் குவித்தனர்.
இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரிக்கில்டன் 22 பந்துகளில் 37 ரன்கள், ரோகித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்து.
போட்டி முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை அடிக்க ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூத்தர்ஃபோர்டு 31 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 40 ரன்களை குவித்தார்.
