மூதாட்டியை வெட்டி கொன்ற சிறுவன் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர், அகிலாம்பாள்பேட்டையை சேர்ந்தவர் அம்சு, 72; கீரை வியாபாரி. இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அம்சு, தனியாக வசித்தார். ஏப்., 10ல், அவர் வீட்டுக்குள், மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தஞ்சாவூர் போலீசார் விசாரித்தனர்.

அதில், பள்ளியக்ரஹாரம், காந்தி நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன், போதையில், அம்சுவிடம் பணம் கேட்டுள்ளார். மறுத்தவரை மண்வெட்டியால் வெட்டி சிறுவன் கொலை செய்தது தெரிந்தது. சிறுவனை போலீசார், நேற்று கைது செய்தனர்.

Source link