பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மும்பை: தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில், 12,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பாடகி ஆஷா போஸ்லே, 92, மாரடைப்பால் மும்பையில் நேற்று காலமானார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்த பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, சுவா ச பிரச்னை, இதய நோய் பாதிப்பு காரணமாக, மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப் பட்டார்.

இறுதிச் சடங்கு செயற்கை சுவாசக் கருவி உதவியு டன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக ஆஷா போஸ்லே நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்தார். ஆஷா போஸ்லே உடல், இன்று காலை 11:00 – பிற்பகல் 3:00 மணி வரை, அவரது வீட்டில் அஞ்சலி க்கு வைக்கப்படுகிறது.

மாலை 4:00 மணிக்கு, சிவாஜி பூங்காவில் இறுதிச் சடங்கு நடக்கிறது.

மஹாராஷ்டிராவின் சாங்கிலியில், 1933ல் பிறந்த ஆஷா போஸ்லே, சிறு வயது முதலே இசையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.

மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியான இவர், தன், 10 வயது முதல் வாழ்நாளின் இறுதி நாட்கள் வரை பாடிக் கொண்டிருந்தார். 70 ஆண்டுகளுக்கு மேல் ஹிந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, தமிழ் உட்பட, 20 மொழிகளில், 12,000க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

ஹிந்தியில் இவர் பாடிய, ‘தம் மேரே தம், சுராலியா ஹை தும்னே, ஓ மேரே சோனா ரே’ உள்ளிட்ட பாடல்கள், காலம் கடந்தும் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழில் , எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற, ‘செண்பகமே செண்பகமே’ பாடல் மூலம் அறிமுகமான இவர், ‘நீ பார்த்த பார்வைக்கு, ஓ பட்டர்பிளை, செப்டம்பர் மாதம், வெண்ணிலா வெண்ணிலா’ உட்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஆர்.டி.பர்மன், இளையராஜா, அனுமாலிக், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபல இசைக் கலைஞர்களுடன் ஆஷா போஸ்லே பணியாற்றியுள்ளார்.

விருது கஜல், நாட்டுப்புறம், பாப், ராப் இசை என, அனைத்து பிரிவிலும் தன் கொஞ்சும் குரலால் வசீகரித்த அவருக்கு மத்திய அரசு, திரைத் துறையின் உயரிய விருதான, ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கி கவுரவித்தது.

‘பத்ம விபூஷண்’ மட்டுமின்றி தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும் வாங்கி குவித்த ஆஷா போஸ்லேவின் மறைவு, இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link