கூடலுார்: கூடலுாரில், வெயிலின் தாக்கத்தால், தலையில் குடை பொருத்தி, பசுந்தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை, பந்தலுார் பகுதிகளில், நடப்பு ஆண்டு துவக்கம் முதலே கோடை மழை ஏமாற்றியதால், வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. கூடலுார், பந்தலுார் பகுதிகளில் முக்கிய விவசாய பயிரான பசுந்தேயிலை உற்பத்தி, வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள், பகல் நேரங்களில் வெயிலில் இருந்து தங்களை காத்து கொள்ள, தலையில் சிறிய குடையை பொருத்தி, பசுந்தேயிலை பறிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், ‘சில வாரங்களாக வெயிலின் தாக்கம், வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவே, சிறிய குடையை தலையில் பொருத்தி கொண்டு, பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம்’ என்றனர்.
********************************************
கூடலுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெண் தொழிலாளர்கள் தலையில் குடை அணிந்து பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
********************************************
வெயிலில் இருந்து தப்பிக்க சிறிய குடை
நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை, பந்தலுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள, தலையில் சிறிய குடை பொருத்தி, பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்.
