Indian Railways | நாடு முழுக்க 100 ரெயில்வே திட்டங்கள்… 2025-26-இல் மட்டும் ரூ. 1.53 லட்சம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு

இந்தியாவில் 2025-26 நிதியாண்டில் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1.53 லட்சம் கோடி முதலீட்டில் 100 திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 110 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.

இது முந்தைய ஆண்டின் முதலீட்டில் 56 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. கடைக்கோடி மக்களை இணைத்து, மிகவும் ஏழ்மையான மற்றும் சேவை கிடைக்காத பகுதிகளுக்கு சேவை வழங்கும் வகையில், இந்திய ரெயில்வே பிரதமர் கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ஒரு புரட்சிகரமான விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மையமாக கொண்டு, 2025-26 நிதியாண்டில் புதிய வழித்தடங்கள், இரட்டிப்பாக்குதல், பல்தடமாக்குதல் மற்றும் பிற பணிகளை உள்ளடக்கிய 100 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களின்படி, “6,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ரெயில்வே வலையமைப்பை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள் முழுவதும் மொத்தம் ரூ. 1.53 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ரெயில்வே விரிவாக்கத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

2,800 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை உள்ளடக்கிய, ரூ. 72,869 கோடி மதிப்பிலான 64 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 2024-25 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, திட்ட ஒப்புதல்கள் 56 சதவீதம் அதிகரித்துள்ளன. வழித்தடங்களின் பரப்பளவு 114 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, மற்றும் நிதி ஒதுக்கீடு 110 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது,” என கூறப்பட்டுள்ளது.

Source link