இந்தியாவில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) புதிய சிம் வழங்கப்பட்ட பிறகு சிம் போர்டிங் செய்வதற்கு 7 நாள் கட்டுப்பாடு உள்ளிட்ட இதுபோன்ற மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. இருப்பினும் சிம் ஸ்வாப் மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சிம் ஸ்வாப் மோசடியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள….
பல கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்டு(Password) பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அறிமுகமில்லாத அழைப்பாளர் அல்லது தனிப்பட்ட விவரங்களையோ, ஓடிபி அல்லது பின் (PIN) எண்களையோ யாருடனும் பகிரக்கூடாது.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் நடக்கிறா என வங்கி அறிக்கைகளையும், கணக்கு நடவடிக்கைகளையும் அடிக்கடி கவனமாக பாருங்கள்.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் முக்கியமான தரவுகளை பகிர்வதை கட்டுப்படுத்துங்கள்.
காரணமின்றி மொபைல் சிக்னல் துண்டிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஏதேனும் முறைகேடுகள் கண்டறிந்தால் உங்கள் சேவை நிறுவனத்தையும், வங்கிகையும் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் செய்யுங்கள். தாமதமின்றி வங்கிக்கும் தகவல் தெரிவிப்பதன் மூலம் பண இழப்பைத் தடுக்க முடியும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
