பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை. ‘பேச்சுவார்த்தையின் முதல் கூட்டம் எப்போதும் வெற்றிப் பெறாது’ என்று பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பாசிட்டிவாகவே தெரிவித்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்புமே, ”பேச்சுவார்த்தை நன்றாகத்தான் சென்றது. பேச்சுவார்த்தையின் இறுதியில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன” என்று ஆரம்பத்தில் பாசிட்டிவாகவே சொன்னார். ஆனால், திடீர் என்று பேச்சை மாற்றி, இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தியில் நுழையும் மற்றும் அதில் இருந்து வெளிவரும் கப்பல்களைத் தடுக்க அங்கே உடனடியாக அமெரிக்க கப்பற்படை நிறுத்தப்படுகிறது. அப்போதுதான் ஒருகட்டத்தில் அனைத்து கப்பல்களுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும். சட்டத்திற்குப் புறம்பாக, ஈரானுக்கு சுங்க வரி கட்டி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தடுக்க அமெரிக்க கப்பற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.மேலும், ஈரான் புதைத்து வைத்திருப்பதாகக் கூறும் கடல் கண்ணிவெடிகளை அகற்றவும் கூறியிருக்கிறேன்.எங்கள் மீதோ, அமைதியாகப் பயணிக்கும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஈரானால் பல கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது இதில் அமெரிக்காவும் சேர்கிறது. இதனால், கப்பல் போக்குவரத்து பெரிய தலைவலியாக மாறி உள்ளது. இதற்கு பதிலடியாக, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே இருக்கும் எரிவாயு நிலையங்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இப்போதிருக்கும் பம்ப் (எரிவாயு) விலைகளை என்ஜாய் செய்யுங்கள். இந்தத் தடுப்பிற்குப் பிறகு, 4 – 5 டாலர் எரிவாயு விலை உங்கள் பழைய கால நினைவாக விரைவில் மாறும்” என்று ஹார்முஸ் ஜலசந்தியில் நடக்கும் பயணம் தடுக்கப்பட்டால், எரிவாயு விலை உயரும் என்று எச்சரித்துள்ளார். Enjoy the current pump figures. With the so-called 'blockade', Soon you'll be nostalgic for $4–$5 gas.ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O) pic.twitter.com/rVxlC6vFWG— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 12, 2026
