RCB VS MI: "எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!"- ஹர்திக் பாண்டியா வேதனை

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 12) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கிய மும்பை அணி, இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அணியின் தற்போதைய பின்னடைவு குறித்து மிகவும் கவலையுடன் பேசியிருக்கிறார்.

rcb vs mi match

“நாங்கள் பந்துவீச்சில் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ஆட்டத்தைத் துரத்த வேண்டிய கட்டாயத்திலேயே இருந்தோம்.

கடந்த சில போட்டிகளாகவே பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, ஆட்டத்தை வழிநடத்துவதற்குப் பதிலாக, பின் தங்கியிருந்து ஆட்டத்தைப் பிடிக்கவே போராடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கே தவறு செய்கிறோம் என்று உட்கார்ந்து யோசிக்க வேண்டும். எங்களுக்குத் தேவையான அந்த வெற்றியும், வேகமும் எப்படி கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பல விஷயங்களை நாங்கள் மறுபரிசீலணை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கும் முறைகள் வேலை செய்யவில்லை. சில போட்டிகளில் நாங்கள் டாஸ் வென்றும் கூட, பேட்டிங் அல்லது பந்துவீச்சில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டோம்.

மைதானத்தின் தன்மையைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். குறிப்பாக, பவர் பிளே-வில் நாங்கள் தடுமாறுகிறோம்.

rcb vs mi match
rcb vs mi match

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பவர் பிளே-வில் பின்னடைவைச் சந்தித்துவிட்டு, பிறகு மீண்டு வரப் போராடுகிறோம். அடுத்த போட்டியில் என்ன செய்யலாம் என்பது குறித்து நிறைய ஆலோசனைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

இருப்பினும், ரூதர்ஃபோர்ட் ஆடிய விதம் எங்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது. அவரிடம் இருக்கும் திறமையும், சக்தியும் எங்களுக்குத் தெரியும். அவர் ஆடிய விதம் அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அணியில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அவர் போன்ற வீரர்கள் இருப்பது எங்களுக்குப் பெரிய பலம்,” என்று ஹர்திக் பாண்டியா எதார்த்தமாகப் பேசியிருக்கிறார்.

Source link