நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் எம்.பி. கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். ரூ.8,000 கூப்பன், உரிமைத்தொகை ரூ.2000 உயர்வு உள்ளிட்ட திமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
* மாதந்தோறும் 1.13 கோடி மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கி வரும் அரசு தான் திராவிட மாடல் திமுக அரசு.
* மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதியை வழங்குவோம் என மிரட்டுகிறது மத்திய அரசு.
* தமிழக பிள்ளைகளின் கல்வியை பறிக்க முயற்சிக்கும் பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார்.
* தமிழ்நாட்டை மிரட்டி தமிழர்கள் மீது இந்தியை மத்திய அரசு திணிக்கப்பார்க்கிறது.
* பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டினோம் என்கிறார்கள். அதில் 51% நிதியை கொடுத்தது தமிழக அரசு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
