த்ரிஷா வீட்டிற்கு வெடிகு@டு மிரட்டல்

சமீப காலமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், திரை பிரபலங்கள் வீடுகள் என பல்வேறு இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் அனைத்தும் போலி மிரட்டல்கள் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் விடும் மர்ம நபர் குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் இந்த மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வழக்கம் போல் அது போலி என்றே தெரிய வந்தது. 

இந்த நிலையில் இன்று நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தேனாம்பேட்டை காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் அந்த வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இதே போல் வங்கதேச துணை தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

Source link