தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.4 லட்சம் போலீசார் ஈடுபட உள்ளனர் என தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல் சட்டமன்ற தேர்தல் பணியில் 3.4 லட்சம் அரசு பணியாளர்கள் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக டிரோன் கேமராக்களை பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
