சென்னையில் 3 நாட்களுக்கு தபால் வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தபால் வாக்குப்பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது.

அந்தவகையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் அஞ்சல் வாக்குப்பதிவு வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

இத்தொகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் (85 வயதிற்கு மேற்பட்டோர்), வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே மேற்குறிப்பிடப்பட்ட மூன்று தேதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வாக்குகளைச் சேகரிப்பார்கள்.

மேலும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தபால் வாக்கு மையங்களில் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link