தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார். அதைத்தொடர்ந்து தான் கையொப்பமிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு, பின் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி ஜன நாயகன்தான் அவரின் கடைசிப் படம் எனக் கூறப்பட்டது. ரூ.500 கோடி பொருட்செலவில் உருவான ஜன நாயகன் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் தணிக்கை பிரச்னைகளால் தற்போதுவரை வெளியாகவில்லை.
இச்சூழலில் வெளியீட்டிற்கு முன்பே முழுப்படமும் இணையத்தில் கசிந்தது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக கேவிஎன் புரொக்ஷனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை ஈடுகட்ட கேவிஎன் நிறுவனத்திற்காக மற்றொரு படத்தில், நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜன நாயகன் விஜய்யின் கடைசிப் படம் இல்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே எதிர்க்கட்சியினர் சிலர் அவர் படம் நடிப்பதை கைவிடமாட்டார் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
