லாரி மீது கார் மோதி விபத்து; குடும்பமே சிதைந்ததால் தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், தனது குடும்பத்தினருடன் கார் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதனை தொடார்ந்து, பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

இதற்கிடையில் நிலக்கரி கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர் ஒருவர், உணவு அருந்துவதற்காக எட்டயபுரம் அருகே லாரியை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். இந்த சூழலில் பாஸ்கரன், தனக்கு முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பாஸ்கரனின் கார் மோதியது. இந்த பயங்கர விபத்தில் பாஸ்கரன், வனிதா, வசந்தி, பழனி என பாஸ்கரனின் மனைவி, பாஸ்கரனின் தாய், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பாஸ்கரனின் இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Source link