இந்நிலையில், சர்வதேச சமூகத்தின் நலன் கருதி ஹார்முஸ் ஜலசந்தியில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு சீனா வேண்டியுள்ளது.
தெற்காசிய கூட்டமைப்பான ஆசியான் அமைப்பு – போர் நிறுத்தத்தை முழுமையாக தீவிரமாக கடைப்பிடித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், “பிரான்ஸும், பிரிட்டனும் இணைந்து ஹார்முஸில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளது.
இது முதன்முறை அல்ல…
அமெரிக்கா இதுபோல் அந்நிய நாட்டின் கப்பல் போக்குவரத்தை முடக்குவது முதன்முறை அல்ல. கியூபாவிலும், வெனிசுலாவிலும் கூட அண்மையில் நடத்தியது.
இப்போது ஈரானிலும் அதை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது. முடக்கத்தை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதைவிட, அஹன் தாக்கங்கள் என்னவென்பதே கவனத்தை ஈர்க்கிறது.
வளைகுடா நாடுகள் சர்வதேச எரிபொருள் விநியோகப் புள்ளியாக உள்ளது. அதுதவிர ஹைட்ரோகார்பன்கள் இருப்பிடமாகவும் இருக்கின்றது. இந்தப் போரும், ஹார்முஸ் முடக்கம் போன்ற நடவடிக்கைகளும் இன்னும் சில வாரங்கள் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தாண்டி பல படிநிலைகளில் பல்வேறு மோசமான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
