நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

நெல்லை,

நெல்லை மாநகர காவல் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில், போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) விஜயகுமார், காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

அப்போது அவர்கள் அனைவரும், “சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்” என்று கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Source link