Biju Menon: "அவரால் தயாரிப்பாளருக்கு 25 லட்சம் நஷ்டம்!" – பிஜூ மேனனை விமர்சிக்கும் ஃபெஃப்கா!

கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம், தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்கும் ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டிருக்கிறது.

Biju Menon

கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் உன்னிகிருஷ்ணன் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வரும் நடிகர்கள் பற்றிக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம், தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்கும் ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டிருக்கிறது.

B Unnikrishnan - FEFKA Leader
B Unnikrishnan – FEFKA Leader

இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்படத்தின் அனைத்துப் பிரிவுப் பணியாளர்களின் பணி நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பணியாளர்களின் ஊதியம் தொடர்பான மாற்றங்கள் ஓராண்டிற்குப் பிறகே அமலுக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.

புதிய ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்ட பிறகு ஃபெஃப்கா-வின் (கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம்) தலைவர் உன்னிகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசினார்.

இதில் அவர், “நடிகர்கள் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வருவதால், ஷூட்டிங் அட்டவணைகளும் தயாரிப்பும் பாதிக்கப்படுகிறது. அதுபோல, ஒப்பந்தப்படி நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்பதில்லை.

Biju Menon
Biju Menon

குறிப்பாக, படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் பிஜூ மேனன் பங்கேற்பதில்லை. அவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட எனக்குப் பயம் இல்லை.

ஜீத்து ஜோசப்பின் “வலத்து வாஷத்தே கள்ளன்’ படத்தின் விளம்பரப் பணிகளைப் பிஜு மேனன் தவிர்த்துவிட்டார்.

அதற்கு முந்தைய படத்திலும் இதே போன்று அவர் செய்ததால் தயாரிப்பாளருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது” எனக் காட்டமாகப் பேசினார்.

Source link