சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அதிமுக முன்னாள்

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி;

திமுக ஆட்சி நிர்வாக திறமையற்ற ஆட்சி என்பதற்கு குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதே சாட்சி. யாராவது இப்படி செய்வார்களா? தேர்வு எழுதியவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மோசமாக ஆட்சிக்கு இது ஒரு உதாரணம்.

தேமுதிகவுடன் மத்திய அமைச்சர் எல். முருகனும், பாஜ தேசிய தலைமையும் கூட்டணி குறித்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? பிரச்னைகள் என்ன என்பதை மாநில அளவில் முடிக்க முடியாததால் தேசிய தலைமை பேச்சுவார்த்தையை எடுத்துக் கொண்டு இருக்கிறது. நல்லவிதமாக முடியும். இதை தான் அவர்களும் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

பாஜவும் எங்களின் கூட்டணி கட்சிதானே. கூட்டணி தொடர்பாக யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சாப்பாட்டில் கத்தரிக்காய், காய்கறிகள் வைப்பது போன்று தான் இதுவும். எங்களுக்கு தான் அது, எங்கள் கூட்டணிக்கு தான் வரும்.

அவர்களுக்கு அன்பாக இருப்பவர்களிடம் அவர்கள் பேசி வர வைப்பார்கள். எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் பேசி வர வைப்போம். எல்லாரும் கடைசியில் வருவது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான்.

இந்த கூட்டணியை அமைத்தது எல்லாமே இபிஎஸ் தான். கூட்டணி பேசி அமைத்து, அமித் ஷா வந்து இங்கே அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் இபிஎஸ். கூட்டணியின் தலைமை அதிமுக. எங்களின் தனிப்பட்ட சர்வேக்கள் சொல்வது 60 சதவிதம் பேர் அதிமுக, பாஜ கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Source link