கான்பூர்: உத்தர பிரதேசத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘லம்போர்கினி’ சொகுசு கார், பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், ‘காரை புகையிலை அதிபரின் மகன் ஷிவம் மிஸ்ரா ஓட்டவில்லை’ என, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
உ.பி., கான்பூரின் வி.ஐ.பி., சாலையில் உள்ள வணிக வளாகம் அரு கே நேற்று முன்தினம் மாலை 3:15 மணிக்கு அதிவே கமாக வந்த லம்போர்கினி சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வா கனங்கள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில், ஆறு பேர் படு காயம் அடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் டில்லியைச் சேர்ந்த பிரபல புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.
குடிபோதையில், அதிவேகமாக அவர் கார் ஓட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஷிவம் மிஸ்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆதாரங்கள்
இது குறித்து ஷிவம் மிஸ்ராவின் வழக்கறிஞர் மிருத்யூஞ்சய குமார் கூறும்போது, ”லம்போர்கினி காரை ஷிவம் மிஸ்ரா ஓட்டிச் செல்லவில்லை. டிரைவர் தான் காரை ஓட்டிச் சென்றார். அதற்கான ஆதாரங்களை நாங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்,” என்றார்.
கான்பூர் போலீஸ் கமிஷனர் ரகுவீர் லால் கூறுகையில், ”ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள், நேரில் பார்த்த சாட்சியங்கள் அனைத்தும் ஷிவம் மிஸ்ரா தான் காரை ஓட்டினார் என்பதை உறுதி படுத்துகின்றன. வழக்கறிஞர் சொல்வதில் உண்மை இல்லை. ”மேலும், வழக்கறிஞரின் வாத திறமை எங்களது விசாரணைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீதிமன்றத்தில் உண்மைகள் அனைத்தையும் தாக்கல் செய்வோம்,” என்றார்.
