'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து; கோப்பு தயாரிப்புக்கு போலீசிடமே லஞ்சம்

சென்னை: போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீதான, ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்வதற்கான கோப்பு தயாரிப்புக்கு, அமைச்சு பணியாளர்கள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றச்செயல், ஒழுங்கீனம் காரணமாக, மாநிலம் முழுதும், 439 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளை விரைந்து விசாரித்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தங்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்டவர்கள், டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் கமிஷனர், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் மனு அளித்து வருகின்றனர்.

அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோப்புகள் தயாரிக்கும் பணியில், காவல் துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், கோப்புகள் தயாரிப்பு பணிக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source link