2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சென்னை: தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை சைதாப்பேட்டையில், நேற்று துவக்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தில், ‘அல்பெண்டசோல்’ மாத்திரை வழங்கப்படுகிறது. இது, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இந்த திட்டத்தில், ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட 2.1 கோடி சிறார்கள், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 54.42 லட்சம் பெண்கள் என, 2.56 கோடி பேர் பயனடைய உள்ளனர் என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Source link