நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 11) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 11) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* பார்லிமென்டில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனால் அனல் பறக்க போகிறது. லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* இந்திய தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னை வருகை தருகின்றனர். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

* சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.

* ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த பணமோசடி வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.

3 போட்டிகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

* குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான்- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

* கொழும்பில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

* மும்பையில் இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

Source link