சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் (பிப்ரவரி 10) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (பிப்ரவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றிமின்றி, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link