'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்…' – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட விஜய்

பின்னர் பேசிய விஜய், ‘திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது மூன்றும் அரசியலுக்கு ஆட்சி அதிகாரத்துக்கும் ரொம்பவே முக்கியம். நம்முடைய தேர்தல் அறிக்கை நேர்மையான உத்தரவாதம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அள்ளிவிடமாட்டோம்.

இரண்டு பேருடைய தேர்தல் அறிக்கையையும் பாருங்கள். ஒருவர் 10000 ரூபாய் கொடுத்தால் இன்னொருவர் 8000 ரூபாய் கூப்பன் கொடுக்கிறார். இதிலிருந்து இருவருமே ஒரே குடையின் கீழ் உள்ள ஊழல் கூட்டம் என்பது தெரியவருகிறது. நம்மால் செய்ய முடிவதை மட்டுமே இங்கே சொல்கிறோம். சொல்லாததையும் ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம்.’ என்றார்.

Vijay
Vijay

விஜய் அறிவித்த வாக்குறுதிகள்:

60 வயதுக்குட்பட்ட மகளிருக்கும் மாதம் 2500 ரூபாய்.

ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்.

100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

பள்ளிகளின் கட்டமைப்பு நவீனப்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி.

போதைப் பொருள் இல்லா பள்ளிக் கல்லூரிகளை உருவாக்க நடவடிக்கை.

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு

Source link