சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை டில்லி தலைமையும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை டில்லி தலைமையும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக தலைமையும் சேர்ந்து முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறி உள்ளார்.

இதுகுறித்து அவரது பேட்டி;

தமிழக காங்கிரசானது, அகில இந்திய தலைமையிடம் அதிகாரத்தை கொடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை டில்லி தலைமையும், இங்கு இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக தலைமையும் சேர்ந்து முடிவு செய்யும். தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு தமிழக காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும். முதல்வர் கூறியது அவரது சொந்த கருத்து.

ரொம்ப சிக்கலாக்கி விட வேண்டாம். இது மிகவும் எளிதான ஒன்று. ஒருவர் கேட்கிறார் (கூட்டணி ஆட்சியை குறிப்பிடுகிறார்), ஒருவர்(முதல்வர் ஸ்டாலினை குறிப்பிடுகிறார்) அது உகந்தது இல்லை என்று சொல்கிறார். எங்கள் தலைமையும், தமிழக தலைமையும் சேர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வு காண்பார்கள்.

இதனால் என்ன பிரச்னை இருக்கிறது? எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கிறது, எழுத்துரிமை இருக்கிறது, அவரவர் அவர்களின் கருத்தை சொல்கிறார்கள். ஆனால் முடிவு பண்ண வேண்டியது யாரு? தமிழக தலைமையும், தேசிய தலைமையும்தான் முடிவு செய்யும். எந்த வித கணிப்புகளையும் உருவாக்காதீர்கள். தமிழக மண்ணை காப்பதற்கான தேர்தல்.

பாஜவின் பார்வை என்பது பிளவுபடுத்தியே பழக்கப்பட்டவர்கள். எனவே அவர்கள் பிளவு, பிளவு என்றுதான் சொல்வார்கள். சிக்கல்களிலேயே வாழ்ந்து கொண்டவர்கள், சிக்கல், சிக்கல் என்று தான் சொல்வார்கள். கரூர் சம்பவத்தை பற்றி இபிஎஸ் என்ன பேசினார்? சம்பவம் பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர் என்றார். அதன் பின்னர் அவர் பேசியது என்ன? பார்த்தீர்களா? தவெக கொடி பறக்கிறது என்றார்.

காலம் கனிந்துவிட்டது,பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது என்று சொன்னாரா? இல்லையா? ஆனால் இப்போது இபிஎஸ் என்ன சொல்கிறார். ஊழல்வாதி(விஜயை இபிஎஸ் கூறுவதை குறிப்பிடுகிறார்), திரைப்படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார், ஊழல் பண்ணியிருக்கிறார் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்கிறார். ஒரு மனிதனுக்கு எத்தனை வாய், எத்தனை முகம் இருக்கும்? நாங்கள் அப்படி எல்லாம் பேசமாட்டோம்.

எங்கள் கூட்டணி அப்படியே தான் இருக்கிறது. எங்களின் அகில இந்திய தலைமையும், திமுகவும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். ஒரு நல்ல முடிவு ஏற்படும். எங்களுக்குள் பிரச்னை எதுவும் கிடையாது, நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். இவர் அப்படி சொல்லிவிட்டார், அவர் இப்படி சொல்லிவிட்டார் என்று பெரிதாக்க வேண்டாம்.

கட்சி, தந்தை என்று அன்புமணி தான் கலக்கத்தில் உள்ளார், 140 ஆண்டுகால கட்சி காங்கிரஸ். அதிகாரத்திற்கும் மட்டும் ஏற்படுத்தப்பட்டது அல்ல இந்த கட்சி. எல்லாரும் தேசமாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது காங்கிரஸ்.

தமிழகத்தை, தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி எங்கள் கூட்டணி. தமிழகமும், மதவாத சக்திகளும் தான் மோத போகின்றன.

இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

Source link