ச ர்வதேச குறியீட்டு நிறுவனமான எம்.எஸ்.சி.ஐ., தனது, ‘குளோபல் ஸ்டேண்டர்டு இண்டெக்ஸில்’ இந்திய நிறுவனங்களுக்கான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஆதித்ய பிர்லா கேபிட்டல் மற்றும் எல் அண்டு டி பைனான்ஸ்’ ஆகிய இரண்டு நிதி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதே நேரம், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இண்டெக்ஸில் உள்ள இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 164ல் இருந்து 165ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஸ்மால் கேப் இண்டெக்ஸில் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 508ல் இருந்து 480ஆக குறைக்கப்பட்டுள்ளது.
