பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை மலைப் பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச் சுவரில், இன்று மாலை சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா நகரைச் சேர்ந்தவர்கள், கோடை விடுமுறையையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அதேப் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிராவலர் சுற்றுலா வேன் மூலம் இவர்கள் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு புறப்பட்டனர்.
