பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: ‘தெற்கு வங்கக்கடலில், பிப்ரவரி 20ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

தமிழகம் முழுதும், இரவு நேரத்தில் குளிர், அதிகாலை பனிப்பொழிவு, பிப்., 20 வரை தொடரும். இந்த சமயத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. ஆனால், தெற்கு வங்கக்கடலில், தமிழகத்தை ஒட்டி, பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள், பிப்., 15ல் ஓரளவு தெளிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, வானிலை துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link