முனிக்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதியில் ஏமாற்றிய ரியல் மாட்ரிட் அணி, பேயர்ன் முனிக் அணியிடம் தோல்வியடைந்தது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 71வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பேயர்ன் முனிக் (ஜெர்மனி) அணிகள் மோதின. மாட்ரிட் நகரில் நடந்த முதல் போட்டியில் பேயர்ன் முனிக் அணி 2-1 என வென்றது. முனிக் நகரில் நடந்த 2வது போட்டியில் பேயர்ன் முனிக் அணி 4-3 என வெற்றி பெற்றது. பேயர்ன் முனிக் சார்பில் ஹாரி கேன், ரியல் மாட்ரிட் அணிக்கு எம்பாப்வே தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டு போட்டிகளில் முடிவில் பேயர்ன் முனிக் அணி 6-4 (2-1, 4-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் ஸ்போர்டிங் லிஸ்பன் (போர்ச்சுகல்), ஆர்சனல் (இங்கிலாந்து) அணிகள் மோதின. முதல் போட்டியில் ஆர்சனல் அணி 1-0 என வென்றது. இரண்டாவது போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. முடிவில் ஆர்சனல் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
முதல் அரையிறுதியில் (ஏப். 28, மே 6), பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்) – பேயர்ன் முனிக் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் (ஏப். 29, மே 5) அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), ஆர்சனல் அணிகள் விளையாடுகின்றன.
