தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடி வெற்றி பெற்றுள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு எதி​ராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்​றது. இந்​திய ஜனநாயகத்​தில் யாருக்கு பிர​தி​நி​தித்​து​வம் இருக்​கும், யாருடைய குரலுக்கு இடமிருக்​கும் என்​பது​தான் தொகுதி மறு​வரையறை. அது மத்​திய அரசை பலப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டுமே ஒழிய, பலவீனப்​படுத்​து​வ​தாக இருக்​கக் கூடாது.

பெரி​யார் -அண்ணா – கருணாநிதி காட்​டிய பாதை​யில், தமிழகம் எப்​போது நீதி, கண்​ணி​யம்,கூட்​டாட்சி ஆகிய​வற்​றுக்​காகவே நின்​றுள்​ளது. தென்​னிந்​தியா ஒன்​றிணைந்​தது; நமது குரல் கேட்​கப்​பட்​டது; ஜனநாயகம் வென்​றது. நாம் தொகுதி மறு​வரையறையை எதிர்க்​க​வில்​லை. நன்கு சிந்​தித்​து, அனை​வரை​யும் கலந்​தாலோ​சித்​து, அனை​வரும் ஏற்​று​கொண்ட, நியாய​மான நடை​முறையையே நாம் வலி​யுறுத்​தினோம்.

Source link