மும்பை: மும்பை மாநகராட்சியை, 44 ஆண்டுகளுக்கு பின் பா.ஜ., கைப்பற்றியது. அக்கட்சியை சேர்ந்த ரிது தவ்டே, 53, மேயராக

மும்பை: மும்பை மாநகராட்சியை, 44 ஆண்டுகளுக்கு பின் பா.ஜ., கைப்பற்றியது. அக்கட்சியை சேர்ந்த ரிது தவ்டே, 53, மேயராக பதவி ஏற்றார்.

நாட்டின் பணக்கார மாநராட்சியான மஹாராஷ்டிராவின் மும்பை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 15ல் தேர்தல் நடந்தது. 227 உறுப்பினர்களை கொண்ட இந்த மாநகராட்சியில், 89 இடங்களை கைப்பற்றி பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான பிளவுபடாத சிவசேனா கட்சி கடந்த 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஆண்டு வந்தது. இந்நிலையில், 44 ஆண்டுகளுக்கு பின் இந்த மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜ., கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த மாநகராட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் ரிது தவ்டே, மேயராகவும், கூட்டணி கட்சியான சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் காதி துணை மேயராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Source link